Translate

Sunday 22 April 2012

கொழும்பில் ஜெயலலிதாவுக்கு ‘சூடு’ வைத்து சுஷ்மா!

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய எம்.பி.க்கள் குழுவின் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், கொழும்பில் இருந்து கிளம்புமுன் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி அதிரடியான விமர்சனங்களை கூறிவிட்டே சென்றிருக்கிறார்.


இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட கருத்து பற்றி கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் சுஷ்மா ஸ்வராஜ்.

“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இலங்கைக்கு பயணம் செய்து, ராஜபக்ஷேயுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்று வந்ததுபோலவே, தற்போதைய எம்.பி.க்கள் குழுவும் இலங்கை செல்கிறது. பயனற்ற இந்தக் குழுவில் எமது கட்சி எம்.பி.-யை இலங்கைக்கு அனுப்பிவைக்க நான் தயாரில்லை” என்று கூறியிருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் கூற்றுப் பற்றி கருத்து தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், “நாம் கொழும்பு வந்த பயணம் ஒரு பிக்னிக்கோ, கேளிக்கை சுற்றுலாவோ அல்ல. இந்த பயணத்தின்போது நாம் காலை 6.30க்கு துவங்கி, இரவு 11.30வரை ஓயாமல் பணிபுரிந்தோம். அதை அறிவாரா ஜெயலலிதா?” என்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, “இலங்கைத் தமிழருக்கு தமிழ் ஈழம் அமைத்துக் கொடுப்பதே எனது கனவு” என்று கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் சுஷ்மாவைக் கேட்டபோது, “அவர் கண்ட கனவு பற்றி அவருக்குத்தானே தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். முடிந்தால், அவரிடம் போய் கேளுங்கள். கனவு பற்றி விளக்கம் கொடுப்பார்” என்றார் கிண்டலாக.

அட, கலைஞரின் கனவுக்கு டில்லியில் யாரும் உத்தரவாதம் கொடுப்பதாக தெரியவில்லையே!

No comments:

Post a Comment