Translate

Tuesday, 3 April 2012

உருத்திரபுரத்தில் கோயிலை இடித்து பௌத்த விகாரை கட்ட முயற்சி; தடுக்குமாறு சிறிதரன் எம்.பி. வேண்டுகோள் _


 உருத்திரபுரத்தில் கோயிலை இடித்து பௌத்த விகாரை கட்ட முயற்சி; தடுக்குமாறு சிறிதரன் எம்.பி. வேண்டுகோள் _
 கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் சிவன்கோயிலை இடித்து விட்டு அங்கு பௌத்த கோயிலைக் கட்டும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.சிறிதரன் கூறியுள்ளார். 


கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மூன்று வாகனங்களில் வந்த 40 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கோயில் நிர்வாகத்திடமோ, ஆலயப் பிரதம குருவிடமோ அனுமதி கோராது கோயிலுக்குள் மூலஸ்தானம் வரை சப்பாத்துக் கால்களுடன் சென்று, புத்தர் சிலையொன்று உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி சகல பகுதிகளுக்கும் சென்று தேடுதல் நடத்தியுள்ளனர்.

மேலும் ஆலயத்தின் முன்பாகவுள்ள செங்கல் பிட்டி ஒன்றினுள் பௌத்த புதை பொருட்கள் இருப்பதாகவும் இந்தப் பகுதி பௌத்த வரலாற்றைக் கொண்டதெனவும் கூறி அங்கு இரு பொலிஸாரையும், நான்கு இராணுவத்தினரையும் அமர்த்தியுள்ளனர். அத்துடன் இது குறித்து ஊடகங்களுக்கு அல்லது வேறு எவருக்கும் தெரிவிக்கக் கூடாதென்றும் எச்சரித்துள்ளார்கள்.

மேலும் மிகவும் பழைமையான அம்மன் சிலையொன்றை நூதனசாலைக்குக் கொடுத்ததாகவும் தற்போது நூதனசாலையிலுள்ள அம்மன் சிலை எங்கு சென்றது என தெரியவில்லையென ஆலய நிர்வாகிகள் தெரிவிப்பதாகவும் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 
___

No comments:

Post a Comment