Translate

Tuesday, 3 April 2012

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் : அமைச்சர் திஸ்ஸ _


பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் : அமைச்சர் திஸ்ஸ _
  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் சர்வதேச சவால்களையும் அழுத்தங்களையும் இலங்கையால் எதிர்கொள்ள முடியாது.

எனவே அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளை இணைத்துக் கொண்டு பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே சிறந்தது என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

பரிந்துரைகளில் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு என்பன முக்கிய இடம் பிடித்துள்ளமையால் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தீர்வுகளை எட்ட முயல வேண்டும்.

ஏனென்றால் ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாகவே இலங்கை விவகாரங்களை கையாள ஆரம்பித்துள்ளன. இது நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் திஸ்ஸவிதாரண மேலும் கூறுகையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிரச்சிகளுக்குரிய விவகாரங்கள் குறித்து அனைத்து தரப்புக்களுடனும் பேசி பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு கட்டாயமாக இடம்பெற வேண்டியதொன்றாகும்.

அது மட்டுமன்றி சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தலையீடுகள் மிகவும் மோசமான முறையில் காணப்படுகின்றமை நாட்டின் நற்பெயருக்கு சவாலாகும்.

எனவே சர்வதேச விமர்சனங்களிலிருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டுமாயின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூடியவற்றை முதலில் நடைமுறைப்படுத்தி விட்டு ஏனையவை தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும். காலத்தை கடத்துவது தொடர் தலையீடுகளுக்கு காரணமாக அமையும். பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற யோசனை வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். எனவே இச் சூழலில் அனைத்து தரப்புக்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் இலங்கையில் மேற்படி திட்டங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுடனான பொறுப்புக் கூறும் தன்மை என்பவற்றை சர்வதேசம் ஆராயும். இதில் முன்னேற்றங்கள் காணப்படாவிடின் மீண்டும் சர்வதேசத்தின் தலையீடுகளும் அழுத்தங்களும் அதிகரிக்கும் என்றார். 
___

No comments:

Post a Comment