எமது நாட்டில் நீதிமன்றம்,பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்கள் சுதந்திரமாக செயற்படவில்லை எல்லாவற்றிலும் அரசியல் செல்வாக்கு ஊடுருவி உள்ளதாக கோட்டே ஸ்ரீநாக விஹாராதிபதி அதிவண. மாதுலுவாவே சோபித தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்டி ஈ.எல்.சேனநாயக்க சிறுவர் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும்வரை நாட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை தற்போது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய நாட்டுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடக்கம் தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரை நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குவதாக கூறுகின்றனர் எவரும் நீக்குவதாக தெரியவில்லை.
இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்த சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு நாங்கள் கோரு கின்றோம். அதற்கு காரணம் அவர் ஒரு அரசியல் கைதியாகும் ஆனால் அரசாங்கம் விடுதலை செய்வதாக தெரிய வில்லை என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment