Translate

Tuesday, 3 April 2012

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெஸ்பியின் யாழ். மாவட்டச் செயலக விஜயத்தின்போது..... செய்தித்துளிகள்


பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெஸ்பியின் யாழ். மாவட்டச் செயலக விஜயத்தின்போது..... செய்தித்துளிகள்
news
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டிருந்த  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின், யாழ். மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாண நிலைமை தொடர்பில் மாவட்டச் செயலருடன் கலந்தாய்வொன்றை நிகழ்த்தினார். 


இராணுவத்தினரின் கடைகள்


இச்சந்திப்பில்,
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரால் தனியாரின் வர்த்தக நிலையங்கள் எடுத்து நடத்தப்படுகின்றன என பிரித்தானியாவில் பேசப்படுகின்றது. அது பற்றிய உண்மைத்தன்மை என்ன? என யாழ் மாவட்ட செயலரை வினவினார்.

அதற்கு மாவட்ட செயலர், தனியார் கடைகளை அவர்கள் எடுத்து நடத்துவதில்லை. படையினர்களே கடைகள் வைத்துள்ளனர். அவை இராணுவத்தினருக்காக சேவைகள் மேற்கொள்ளும் முகமாக உள்ளது. ஆயினும் அந்தக் கடைகளில் மக்களும் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என விளக்கமளித்தார்.


காலை வணக்கம் தெரிவிக்காத பணியாளர்கள் 

மாவட்டச் செயலக நிர்வாக செயற்பாடுகளை அறியும் பொருட்டு, செயலகத்தின் சில பகுதிகளுக்கு சென்றார். அதன்போது, அவர் பணியாளர்களைப் பார்த்து, ஆங்கிலத்தில் காலை வணக்கம் என்றார்.

ஆனால், ஓரிரு பணியாளர்களைத் தவிர பெரும்பாலான பணியாளர்கள், பதில் வணக்கம் கூறவில்லை. இவ் விடயம் தொடர்பில், பின்னர் மாவட்டச் செயலர், பணியாளர்களுடன் கடிந்து கொண்டார்.

எவராவது, வணக்கம் சொன்னால் பதிலுக்கு வணக்கம் சொல்லப் பழகுங்கள். என்றார்.

வேலையில்லாப் பட்டதாரிகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை தொடர்பில் மாவட்டச் செயலரிடம் நெஸ்பி கேட்டார்.
அதற்கு மாவட்டச் செயலர்,
யாழ்ப்பாணத்தில் நன்கு கல்வி கற்றவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டப்படிப்பை முடித்தும் உள்ளனர். என்றார்.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் தம்மிடம் பதிவு செய்த சுமார் 2600 பேர் வேலையில்லாப் பட்டதாரிகள் என நெஸ்பிக்கு, மாவட்டச் செயலர் தெரிவிக்க நெஸ்பி வியந்து போனார்.

No comments:

Post a Comment