Translate

Tuesday 3 April 2012

'ஓட்டை வாய்' காரியவாசத்தை தூதர் பதவியிலிருந்து தூக்கும் ராஜபக்சே!


'ஓட்டை வாய்' காரியவாசத்தை தூதர் பதவியிலிருந்து தூக்கும் ராஜபக்சே!

கொழும்பு: இந்தியாவுக்கு இலங்கை தூதராக தற்போது இருக்கும் பிரசாத் காரியவாசத்தை தூதர் பதவியிலிருந்து விடுவித்து வெளியுறவுத்துறை செயலாளராக மாற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாம். அவருக்குப் பதில் சிங்களர் ஒருவரை தூதராக அனுப்பவிருக்கிறதாம் இலங்கை.

பிரசாத் காரியவாசம் ஒரு தமிழர்தான். இருந்தாலும் இலங்கை அரசின் ட்யூனுக்கேற்பவும்,அதை விட ஒரு படி மேலே போயும் டான்ஸ் ஆடி வருபவர். சமீபத்தில் இந்திய எம்.பிக்களை மோசமாக விமர்சித்து மத்திய அரசிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். மேலும், தமிழக அரசியல் கட்சிகளும் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

உண்மையில் ஈழப் போரின் முடிவில்தான் காரியவாசத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது சிங்கள அரசு. இதற்குக் காரணம், ஒரு தமிழரை வைத்து தமிழர்களுக்கு எதிரான நிலையை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற குரூரமான எண்ணத்தில்தான்.

இப்படித்தான் சென்னையில் உள்ள துணைத் தூதரக அலுவலகத்தில் துணைத் தூதராக அம்சா என்பவரை ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் பணியில் வைத்து ஏகப்பட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்தது இலங்கை அரசு.

இந்த நிலையில் தற்போது காரியவாசத்தை கொழும்புக்கே திருப்பி அழைத்துக் கொள்ள இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாம். அவரை வெளியுறவுத்துறை செயலாளராக்கப் போகிறாராம் ராஜபக்சே. அவருக்குப் பதில், தற்போது செயலாளராக இருக்கும் கருணாரட்ன அமுனுகம என்பவரை தூதராக்கி டெல்லிக்கு அனுப்புவார்கள் என்று தெரிகிறது.

அதேபோல ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டின்போது இலங்கை அரசின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தவரான தமிழரான தமரா குணநாயகத்தையும் மாற்றவுள்ளனர். அவரை வேறு நாடு ஒன்றுக்கு தூதராக நியமிக்கவுள்ளனராம்.

No comments:

Post a Comment