Translate

Monday, 25 June 2012

மனிதக் கொலை, கற்பழிப்பு செய்த அமரேவுக்கு மாத்திரம் புதிய நீதியா..?


மனிதக் கொலை, கற்பழிப்பு செய்த அமரேவுக்கு மாத்திரம் புதிய நீதியா..?

மனிதக் கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஜுலம்பிட்டி அமரே எனப்படும் மீகஹகமகே அமரசிறி கடந்த 19 ஆம் திகதி தங்காலை நீதிமன்றில் ஆஜரான போது அப்போது நீதவானால் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு அமரேவுக்காக இடை நடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற நடைமுறைக்கு அமைய இவ்வாறு வழக்கை இடைநடுவில் கைவிட முடியாது.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அமரே மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிணை பெற அவர் தகுதியுள்ளவர் என தங்காலை நீதிபதி சந்திரசேன ராஜபக்ஷ் அப்போது தெரிவித்தார். ஆனால், அதற்கு அரச வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததோடு வழக்கை அடுத்த நாள் அதாவது 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அவரை சிறையில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றல் ஆஜரானால் இதற்கு முன்னர் ஆஜராகாமல் இருந்ததற்கான காரணத்தை அல்லது வைத்திய அறிக்கையைச் சமர்பிக்க வேண்டும். சம்பிரதாயப்படி அப்படி செய்யாவிட்டால் சந்தேக நபருக்கு பிணை வழங்க முடியாது. அமரேவுக்கு எதிராக பிடிவிறாந்து நூற்றுக்கணக்கில் இருப்பதாக அறிந்து கொண்டே நீதிபதி பிணை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
15 ஆம் திகதி கட்டுவனவில் இடம்பெற்ற ஜேவிபி கூட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட போது அமரே அங்கு இருந்ததாக இரகசியப் பொலிஸார் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
எனினும் 20 ஆம் திகதி வழக்கு விசாரிக்கப்பட்ட போது தான் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்வதாகவும் இரண்டு வாரத்தில் தங்காலை மேல் நீதிமன்ற ஆணையபளராக்க கடமையாற்ற வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது தகுதியுடையவரை கொண்டு உடன் வெற்றிடம் நிரப்பப்பட வேண்டியது முறையாகும். அல்லாவிடின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஓய்வு பெற்ற பின் தானே மேல் நீதிமன்ற ஆணையாளராக வருவேன் என நீதிபதி சந்திரசேன ராஜபக்ஷ பகிரங்கமாக நீதிமன்றில் அறிவித்தமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment