தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு |
தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அதற்குச் சமாந்தரமாக அதேநாளில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
அமெரிக்கா
நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.
பிரிட்டன்
பிரிட்டன் பிரதமுர் டேவிட் கமரூனின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தது. பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்ததோடு தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.
கனடா
தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவமே வெளியேறு என்ற முழக்கத்துடன், நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமாக, ரொறன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் இடம்பெற்றது.
ஜேர்மனி
பொன் நகரில் உள்ள ஐ.நாவின் காரியாலயத்துக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றிருந்தது.
தாயகப் போராட்டங்களுக்குச் சமாந்தரமாக இவ்வாறான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 3 July 2012
தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment