Translate

Tuesday, 3 July 2012

கை, கால்கள் முறிந்த நிலையில் மகர சிறையில் வவுனியாக் கைதிகள்


கை, கால்கள் முறிந்த நிலையில் மகர சிறையில் வவுனியாக் கைதிகள்
news
 வவுனியா சிறைச்சாலையில் இருந்து அரசியல் கைதிகள் 30 பேரில் 27 பேர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மகர சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
இந்த 27 பேரும் கை, கால்கள் முறிந்த நிலையிலும், இரத்தம் தோய்ந்த உடைகளுடனும் அங்கு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படாமலும் உணவு வழங்கப்படாமலும் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 30 பேரில் மிகுதி 3 பேர் மிகவும் மோசமான நிலையில் ராகம அல்லது கம்பஹா பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment