![]() |
ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கன் நியூஸ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இணைய தளங்கள் முடக்கப்பட்ட சம்பவம் குறித்து எமக்கு தகவல் கிட்டியது. இலங்கை மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார். _
No comments:
Post a Comment