சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான ஐ.நா நிகழ்ச்சி நிரல் அவசியம்: ஐ.நா.சபையில் கரன் பார்கர்
சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், மேற்கு சகாராவில் அபிப்பிராய வாக்கெடுக்கப்பட நடாத்தப்பட வேண்டுமென்றும், தீபெத்திலும் செய்யப்பட வேண்டியவற்றை தெளிவாக உள்ளடக்கப்பட்டிருந்தாலும், யாவுமே ஏம்மாற்றத்தை தான் தருகிறது.
இவைகள் எதுவும் இதுவரையில் தீர்க்கப்படாதது மட்டுமல்ல, சுயநிர்ணய உரிமை என்ற விடையமே, இப்போது மெல்ல மெல்ல மறைந்து போய்விட்டது. இந்நிலையில் இது சம்பந்தமான இங்கு பேசவிருப்பமின்மை காணப்படுவதால், சுயநிர்ணய உரிமையை தனியான நிகழ்ச்சி நிரலாக சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நமது கோரிக்கையென, கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தி உரையாற்றினார்.
மேலும் அவரது உரையில் தெரிவிக்கப்பட்டதாவது...
சிறிலங்கா அரசாங்கம் தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை, ஐ.நா ஆணையப் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும் என்று (ஐ.நா மனித உரிமைகள்) பேரவை தனது 19ம் தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், கூறியிருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
அங்கு தற்போது, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுவது தோல்வி கண்டிருப்பது மட்டுமல்ல, பல புதிய பாரதூரமான தமிழ்மக்கள் மேலான மனித உரிமை மீறல்கள் காணப்படுகிறது.
தமது விருப்பத்திற்கு மாறாக, இலங்கைக்கு நாடுகடத்தபட்ட தமிழ்மக்கள், கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு விசாரணையற்ற மரணதண்டணை கொடுக்கப்பட்டிருப்பதால், அடக்கலம் கோரி மறுக்கப்பட்ட 40 தமிழரை, பிரித்தானிய அரசாங்கம் நாடுகடத்துவதை, அவ்விடத்து உயர்நீதிமன்றொன்று செல்லுபடியற்றதாக்கியிருப்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தங்கள் காணிகளும், உடமைகளும் பறிமுதல் செய்யப்படுவதிலிருந்து ,அவற்றை காப்பாற்றிக்கொள்ள முயன்ற தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுவதற்கும், பேசுவதற்க்குமான சுதந்திரங்கள்கூட மறுக்கப்படுவதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆகையால் ஐ.நா ஆணையப் பிரதிநிதிகள் பேரவையால் விடப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென்று தூண்டும் அதேநேரம், ஐ.நா ஆணையப் பிரதிநிதிகள் இலங்கை நிலவரங்களை மீளாய்வு செய்யும்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிந்தனை தடங்களுக்குள் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளமல், சர்வதேச மனிதஉரிமைகள், மனிதசட்டங்களின் சிந்தனைதடங்களை ஆணைபெற்றோர் பின்பற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment