வடக்கில் அதிகளவான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வுவழங்கப்படவில்லை – பாக்கியசோதி சரவணமுத்து
வடக்கில் அதிகளவான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வுவழங்கப்படவில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர்பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், உட்கட்டுமானம், முன்னாள் போராளிகளுக்குபுனர்வாழ்வு அளித்தல் போன்ற துறைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.
எனினும், யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் பாரியளவிலானபிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருவதாகவும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் மீள விசாரணைக்குஉட்படுத்தப்படுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன சமூகங்களுக்கு இடையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்குதேவையான பின்னணி இதுவரையில் உருவாக்கப்படவில்லை எனவும், அதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, வடக்குஇராணுமயமாக்கல், தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தைஅமுல்படுத்தாமை, யுத்தம் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்ய சுயாதீன ஆணைக்குழுஉருவாக்காமை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்hளர்.
ஏ.சீ.எப். தொண்டு நிறுவன பணியாளர் படுகொலை, திருகோணமலை மாணவர்படுகொலை, செனல்4 வீடியோ காட்சி போன்றன தொடர்பில் விசாரணை நடத்துமாறு உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானதுஎன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment