சிறுபான்மை மக்ளக் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியப் பிரஜையான பிரேம்குமார் அந்நாட்டு ஊடகமொன்றுக்குஅளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகள்பிரயோகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் பெரும்பான்மையினருக்கு சுயநிர்ணய அதிகாரங்களை வழங்குதல் அல்லது அதிகாரப் பரவலாக்கம் ஆகிய தீர்வுத் திட்டங்களில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயநிர்ணய உரிமைகள் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என அவர்தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்லின மக்களை பிளவுபடுத்தும் வகையிலான தீர்வுத் திட்டங்கள் பயனுள்ளதாக அமையாது எனவும், சகல இன மக்களையும் இணைக்கும் வகையில் தீர்வுத் திட்டம்அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது நோக்கங்களைப் பூர்த்திசெய்து கொள்ளும் நோக்கில் இலங்கை விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இனவாத அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படுவதனை விரும்பவில்லைஎன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தேசியவெற்றியாகக் கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் உழைக்கும்வர்க்கத்தினருக்கு எதிராக செயற்பட்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதேதமது கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தின் காணிகளை கைப்பற்றி இந்திய மற்றும்சீன நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்கா அல்லது காலணித்துவ நாடுகளின் தேவைகளுக்காக யுத்த குற்றவிசாரணை நடத்தப்படக் கூடாது, யுத்த ஆரம்பம் முதல் முடிவு வரையில் இரண்டு தரப்பினரும்மேற்கொண்ட சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனபிரேம்குமார் குணடரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment