Translate

Friday, 14 September 2012

ஜனாதிபதி மஹிந்தவின் விஜயத்தில் மாற்றமில்லை: மத்திய பிரதேச மாநில அரசாங்கம்


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், பௌத்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள விஜயத்தில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என மத்திய பிரதேச மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தை ரத்துச்செய்யுமாறு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹானுக்கு எழுதிய கடிதமொன்றில மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரியுள்ளார்.  இவ்விஜயம் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகமாகும் என வைகோ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செப்டெம்பர் 21 ஆம் திகதி சாஞ்சியில் தனது தலைமையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ஆயிரத்துக்கும் குறையாக எண்ணிக்கையானோர் இதில் பங்குபற்றவுள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்விஜயத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என மத்திய பிரதேச மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment