உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர்

...
ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை இத்தகைய பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.
மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளை, தசை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பலவீனமாவதை குறைக்கிறது.
மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. இதனால் இளமையுடன் இருக்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மாதுளம் பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிட அதன் தோல் மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்.

No comments:
Post a Comment