Translate

Friday, 14 September 2012

அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு - US இலங்கை மீது அழுத்தம்


அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு - US இலங்கை மீது அழுத்தம்

US இலங்கை மீது அழுத்தம்
 
 மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு மிகவும் கரிசனையுடன் பொறுப்புக்கூறவேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொடே;; ஓ பிளேக் வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார்.
 
அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அது அதிகாரப் பகிர்விற்கு வரவேண்டும் எனவும் அவர் வலயுறுத்தினார்.
 
அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செயற்படுத்துதல், தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் போன்ற விடயங்கள் குறித்தும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், இது குறித்து இலங்கை அரசாங்கம் பொறுப்புனர்ச்சியுடன் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
 
அதுமாத்திரமின்றி மனித உரிமை மீறல் மற்றும் காணாமல் போதல் விடயங்கள் குறித்து முறையான பொறுப்புவாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் எவலியுறுத்தினார்.
 
அத்துடுன் மிகவிரைவில் வட மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுவதுடன், மாகாணங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொடே;; ஓ பிளேக் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment