ஈழத்தில் இடம்பெற்ற தமிழினத்தின் கொடூரங்களைவிற்றுக்காசாக்கும் சுயநலவாதிகள்!
தமிழினத்திற்கு நடந்த பேரவலத்தை உலகிற்கு உணர்த்தபுலம்பெயர் தமிழர்கள், உண்ணாநிலை
போராட்டம், ஆர்ப்பாட்டம், வீதிமறிப்பு போராட்டம்,முற்றுகைப் போராட்டம் என பல போராட்டங்களைமேற்கொண்டிருந்தும் அவை முழு அளவில் வெளியுலகைதிரும்பிப்பார்க்க வைக்கவில்லை.
இந்த நிலையில் எவ்வாறு வெளியுலகிற்கு இதை எடுதுவிளக்கலாம், நிரூபிக்கலாம் என்ற ஏக்கத்தில் பல வேலைத்திட்டங்களையும் புலம்பெயர் தமிழர் முன்னெடுத்துவந்தவேளையில் சனல் 4 தொலைக்காட்சியானது தொடர்ச்சியாகபல திடுக்கிடும் உண்மைநிறைந்த ஆதாரங்களை வெளியிட்டுவந்திருந்தது.
அதன் தொகுப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை "இலங்கையின் படுகொலைக்களம்" காணொளி ஒளிபரப்பானபோதுபிரித்தானியாவில் மட்டும் எட்டு இலட்சம் மக்களுக்குமேல்பார்வையிட்டுள்ளதாக தெரிகிறது.
இது தமிழர் அல்லாத வேற்றினத்தவர்களையும் சிந்திக்கவும்,கண்கலங்கவும் வைத்துள்ளதோடு அரசாங்க மட்டத்திலும் சிலமாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதைபாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாகவெளியிட்டுவரும் கூற்றுக்கள் உணர்த்துகின்றன.
அதன் காரணமாக ஏற்பட்டுள்ள கிராக்கியை கவனத்திற் கொண்டு"இலங்கையின் கொலைக்களம்" காணொளி ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டிக்கள் அதுகும் தமிழர்களே விலைக்கு விற்பனை செய்வதானது மிகவும் அருவருக்கத்தக்ககீழ்த்தனமான விடையமாகும்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குவாரிவாரி கொடுத்தவர்களும், எத்தனையோ பங்களிப்பைசெலுத்தியவர்களும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திஇதுகும் ஒரு பங்களுப்பாக, உங்கள் கடமையாக உணர்ந்துஆயிரக்கணக்கிலோ, அல்லது நூற்றுக்கணக்கிலோபிரதிசெய்து அவற்றை இலவசமாக அனைவருக்கும் வழங்கிகுறிப்பாக வேற்றினத்தவர்கள் எல்லோரையும் பார்க்கவைப்போம்.
அதுவே எம்மின விடுதலைக்காக ஒவ்வொரு தமிழரும்செய்யும் உண்மையான பங்கழிப்பாக இருக்கும்.
இதைத் தவிர்த்து எம் இனத்தின் அழிவிலும், அவர்களின்இரத்தத்திலும் குளிர்காயும் கீழ்த்தரமான நிலையினைதவிருங்கள்.
நன்றி
தமிழ்மாறன்
chanel4_CD_sale.jpg 54K View |
No comments:
Post a Comment