இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறுமானால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த உக்கிரமான கேள்விகளை இலங்கையின் கொலைக்களங்கள் நமக்குள் எழுப்புகிறது. ........... read more
No comments:
Post a Comment