Translate

Tuesday 7 June 2011

தாயகம் நோக்கிய செயற்பாட்டில் ஓரணியாக செயற்படுவதென ஏகமனதாக முடிவு.


by Thamil Maaran tamilnews4u@yahoo.com
நேற்று (05-06-2011) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் தமிழீழ செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சமகால மக்கள் கருத்தரங்கிலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப்பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்திசெய்யும் பொருட்டும்தாயகத்தில் நெருக்கடிகளுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடவென இக்கருத்தரங்கு பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.


லண்டன் KINGSBURY பகுதியில் No: 368A Stag Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE, மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த கருத்தரங்கு குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது.

இக்கருத்தரங்கில் நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்புக்களை வழங்கிவந்தவர்களும்ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டிகளாக இருந்தவர்களுமென 174 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தை ஏற்பாடுசெய்திருந்த தமிழீழ செயற்பாட்டாளர்களின் சார்பில் திரு.அன்பழகன் என்பவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்அவர் தனது உரையில் நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிவந்தவர்கள் அனைவரும் இங்கு வருகைதந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறதுஅத்தோடு இக்கூட்டத்தின் நோக்கமே கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பாடுகளின்றியும்செயற்திட்டங்களை முன்னின்று கவனித்து வழிநடத்தவும் யாருமற்ற ஒரு குழப்பமான நிலையில் அனைவரும் ஒதுங்கியிருந்துவிட்டோம்ஆனால் காலம் உருண்டோடுகிறதுதாயகத்தில் மக்கள் தினமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்கொல்லப்படுகின்றனர்இந்நிலை தொடர்ந்தால் அங்கு எல்லாமே முடிந்துவிடும்.ஆகவே புலம்பெயர்ந்த தேசங்களிலே வாழும் நாம் அனைவரும் தாயகம் நோக்கி அரசியல் மற்றும் மனிதநேய செயற்திட்டங்களில் ஒருங்கிணைந்து செயற்படவேண்டியதும் காலத்தின் கடமையாக உள்ளதுஎனக் கூறினார்.

பின்னர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிலிருந்து ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவர் அக்கூட்டத்தை வழிநடாத்தி சென்றிருந்தமையும் காண முடிந்தது.

இக்கூட்டத்தில் நீண்டகாலமாக தமிழீழ போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் பங்களித்துவந்தவர்களில் சிலர் தங்கள் அனுபவங்களையும்போராட்ட வழிமுறைகளையும்,தற்போதுள்ள சூழலை எவ்வாறு கடந்து செல்லவேண்டும் என்பது தொடர்பாகவும் தமது சிறு கருத்துப் பகிர்வை செய்தனர்தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த பணியினை முன்னின்று செயற்படுத்தவுள்ள ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தமது முழுமையான தெளிவான கருத்துக்களை வழங்கி தமிழீழ செயற்பாட்டாளர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் கேள்வி நேரமும்மக்கள் கருத்துப்பகிர்வுக்குமென நேரம் ஒதுக்கப்பட்டதுஇதில் தமிழீழ விடுதலைக்காக முன்னின்று செயற்படும் முக்கிய அமைப்புக்களை சேர்ந்த உறுப்பினர்களும்,பிரமுகர்களும் கலந்துகொண்டு கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை சுட்டிக்காட்டியதோடு இனிவருங்காலங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதையும் அதற்கு தமது முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் உறுதியளித்தனர்.

தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத்தரும் என உளமார ஏற்றுக்கொண்டவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றலாம் என்பதை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து,விடுத்திருந்த ஊடக அறிவிப்பை சரியாக உள்வாங்கி உளசுத்தியோடுசுயநலமற்று தாயகவிடுதலை நோக்கி செயற்பாடுகளை காலாகாலமாக செய்துவந்தவர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்ததுடன்
தமது முயற்சி பலனை தந்துள்ளதாகவும்எதிர்காலத்தில் எமது தாயக விடுதலை நோக்கிய செயற்பாட்டில் நம்பிக்கையையும்உறுதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment