தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர் என அரசு சார்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பறைசாற்றுகின்றனர். ஆனால், ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்னும் வீடுகள் வழங்கப்படாத அகதிகள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
மக்கள் துன்பப்படும்போதும், நம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போதும் அவற்றுக்காக நெஞ்சு நிமிர்த்தி தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஒன்றே குரல் கொடுத்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஆதரவா ளர்களாகவே உள்ளனர். இவர்கள் அரசின் தவறுகளை முன்னிலைப்படுத்த மாட்டார்கள். அதிலும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளைத் தட்டிக் கேட்கக் கூட முடியாதவர்களாகவே உள்ளனர்.
அண்மையில் தமிழ் பிரதேசங்களில் வழங்கப்பட்ட சிற்றூழியர் நியமனத்தில் கூட பெரும்பான்மை இனத்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தமிழ்மகன் கூட இந்த நியமனத்தில் இடம்பெறவில்லை. இந்தப் புறக்கணிப்பைக்கூட தட்டிக் கேட்காத நம்மவர்கள் அமைச்சுக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய அமைச்சுப் பதவி தேவை தானா?
இதேவேளை, ஐ.நா. அறிக்கையை முற்றுமுழுதாக ஆதரிக்கும் கட்சியாக நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின் றது. வேறு எந்த தமிழ்க் கட்சியும் ஆதரிக்கவில்லை என்பது எமது மக்களுக்குத் தெரியும் என்றார்
No comments:
Post a Comment