Translate

Thursday 16 June 2011

கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவம் கொடூரத் தாக்குதல்:




  •  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கூட்ட மைதானத்துக்குள் திடீரெனப் பிரவேசித்த சுமார் 50 இராணுவத்தினர் திடீர்த் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். பொதுமக்கள் மீது கொட்டன் தடிகளால் தாக்குதல் இடம்பெற்றது. பலர் படுகாயமடைந்துள்ளனர்.  
  • சரவணபவன் எம்.பி.யைத் தாக்குதவற்கு படையினர் முற்பட்ட போது அவர்களுடைய அமைச்சரவைப் பாதுகாவலர்கள் அதனைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் பொல்லுகளால் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். 
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடைய வாகனங்கள் இராணுவத்தினரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 



யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வியாழக்கிழமை மாலை நடத்திய உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவத்தினர் திடீர்த் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். மைக் பிடுங்கப்பட்டு, மேடை சின்னாபின்னமாக்கப்பட்டு, கதிரைகள் உடைக்கப்பட்டு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன........... read more

No comments:

Post a Comment