லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக தமது வாழ்வின் கஸ்ட நிலைக்கு சென்றுள்ள இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பு மட்டக்களப்பில் கணிணி பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்துவருகின்றது.
இந்த கணிணி பயிற்சி கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பின் இலங்கை பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகிலன் பவுன்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவருமான சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிஸன் தலைவர் ஞானமயானந்த ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்....................... READ MORE
No comments:
Post a Comment