Translate

Monday, 3 October 2011

ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் திடீர் சந்திப்பு?


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு கடந்த வாரம் அமைச்சரின் இல்லத்தில்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அச் சந்திப்பின் போது சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அரசியல் தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதனூடாக தீர்வுகள் பெறப்பட வேண்டும் என்ற கருத்தினை  அமைச்சர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.

No comments:

Post a Comment