Translate

Monday, 3 October 2011

வடமாகாண சபை தேர்தலை நடத்துமாறு அழுத்தம்: அரசதரப்பு தயக்கம்


வடமாகாண சபை தேர்தலை நடத்துமாறு அழுத்தம்: அரசதரப்பு தயக்கம்


வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும் எனவே தற்போதைய நிலையில் தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என அரசாங்கம் கருதுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.


வடமாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துமாறு  அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி வருவதாக அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சூழல்நிலை இல்லை என கூறி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ்க் கட்சிகளின் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்க் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஆகியோரை சந்தித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியதாகவும் ஆனால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழத்தேசிய கூட்டமைப்புடன் அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கள் நடத்தப்படும் போது வடமாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என பிரதமர் ஜயரட்ண பதிலளித்ததாக அரசதரப்பு தமிழ் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனால் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும் எனவே தற்போதைய நிலையில் தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என அரசாங்கம் கருதுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment