அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது,
1. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணிப் பதிவு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. வெலிஓயா சிங்களக் குடியேற்றம் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
3. மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.
4. வலி.வடக்கு, சம்பூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த உடனடியாக வழிவகுக்க வேண்டும்.
இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரச தரப்பினார் உறுதியளித்தனர் எனத் தெரிய வருகிறது
அத்துடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் போது, அரச தரப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சஜீன் வாஸ் குணவர்த்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment