Translate

Sunday, 13 November 2011

பிரித்தானியாவைச் சேர்ந்த அம்மா பலவந்தமாக உணவூட்டியதில் குழந்தை மரணம்! அம்மாவுக்கு 3 வருட சிறை

பிரித்தானியாவைச் சேர்ந்த அம்மா பலவந்தமாக உணவூட்டியதில் குழந்தை மரணம்! அம்மாவுக்கு 3 வருட சிறை

பிரித்தானியாவைச் சேர்ந்த அம்மா ஒருவருக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைக்கு பலவந்தப்படுத்தி உணவு ஊட்டியதில் மேற்படி குழந்தை மரணத்தை தழுவியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Diamond என்ற 10 மாதங்களேயான பெண் குழந்தைக்கு உணவு ஊட்டியதில் ஏற்பட்ட சுவாசக் கோளாறில் தான் குழந்தை மரணமடைந்ததாக பிரித்தானியப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நுரையீரலுக்குள் உணவு சென்றதால் சுவாசக் கோளாறில் தான் குழந்தை மரணமடைந்ததாக மருத்துவமனையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைக்கு உணவூட்டுவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment