Translate

Wednesday, 9 November 2011

யாழ்ப்பாணத்தின் மின்வெட்டும் பலகோடி ரூபா மோசடி- பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஸ

யாழ்ப்பாணத்தின் மின்வெட்டும் பலகோடி ரூபா மோசடி- பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஸ
யாழ்.குடாநாட்டினில் நிலவி வரும் மிக மோசமான மின்வெட்டின் பின்னணியில் பல கோடி ரூபா நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை அம்பலமாகியுள்ளது. இவற்றின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தாவே உள்ளதும் அம்பலமாகியுள்ளது. என்று குளோபல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அச்சங்காரணமாக உள்ளுர் ஊடகங்கள் பலவும் இவ்விடயத்தினில் மௌனம் காத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த கால யுத்தங்காரணமாக குடாநாட்டிற்கான தரைவழி லக்ஸபானா மின்சாரம் இருபது வருடங்களுக்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சுன்னாகத்தில் பொருத்தப்பட்டுள்ள பாரிய மின்பிறப்பாக்கிகள் ஊடாகவே உள்ளூர் மின் விநியோகம் இடம் பெற்று வருகின்றது. அவ்வகையினில் சீனநாட்டு நிறுவனமான நொதேர்ன் பவர் நிறுவனம் 2007 முதல் குடாநாட்டிற்கான மின் விநியோகத்திற்கான ஒப்பந்தகாரராக இலங்கை மின்சாரசபையினால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திற்கு தேவையான 30 மெகா வற்ஸ் மின்சாரத்தை சீன நாட்டு நிறுவனமான நொதேர்ன் பவர் நிறுவனம் வழங்க வேண்டும். எனினும் மிகவும் பழுதடைந்த பாவனைக்கு உதவாத மின் பிறப்பாக்கிகளால் யாழ்ப்பாணத்திற்கு தேவையான 30 மெகா வற்ஸ் மினசாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. சுமார் 15 மெகா வற்ஸ் மின்சாரத்தை மட்டுமே அவர்களால் வழங்க முடிந்துள்ளது.
ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திற்கு தேவையான 30 மெகா வற்ஸ் மின்சாரத்தை சீன நாட்டு நிறுவனமான நொதேர்ன் பவர் நிறுவனம் வழங்க தவறியதையடுத்து அதனுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய மின்சார சபை அதிகாரிகள் முயன்ற போதும் அரசு அதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை.சுமார் ஜந்து வருடங்களுக்கு மேலாக இவ்விழுபறி தொடர்கின்ற நிலையில் சீன நாட்டு நிறுவனமான நொதேர்ன் பவர் நிறுவனத்தையும் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தாவே கொள்வனவு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.எனினும் நாள் தோறும் 30 மெகா வற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்குவதாக கூறி நொதேர்ன் பவர் நிறுவனத்தின் பேரில் பணம் பெறப்பட்டு வருகின்றது. எனினும் உண்மையில் 15 மெகா வற்ஸ் மின்சாரத்தை மட்டுமே அவர்கள் மின் வெட்டுடன் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
மின்வாடகை கட்டணமாக பொதமக்களிடமிருந்தும் அரசின் மானியத்திலிருந்தும் இக்கும்பல் பணத்தை கோடிக்கணக்கினில் கொள்ளையிட்டு வருகின்றது.குறிப்பாக குடாநாட்டினில் மின்சார உள்ளக கட்டமைப்புகளை மேம்படுத்த பிரிட்டன் வழங்கி வரும் பெருமளவு பணமும் இவ்வாறே அக்கும்பலை சென்றடைகின்றது. பாதுகாப்பமைச்சின் செயலாளரான கோத்தாவின் உத்தரவுகளை நிறை வேற்றும் வகையினில் பெரும்பான்மையின சிங்கள அதிகாரியொருவரே வடக்கிற்கான மின்சாரசபை முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment