முஸ்லிம் நாடுகளின் கல்வித்திட்டம் தொடர்பில் அமெரிக்க அரசின் சுயாதீன ஆணைக்குழுவொன்று நடத்திய ஆய்வறிக்கையொன்றிலேயே இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி கற்பிக்கப்படும் முறை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் அரச பாடசாலைகள் மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் மதரஸாக்களில் மதவேறுபாடுகளை அதிகரிக்கும் வகையான பாடத்திட்டங்களே அமுலில் உள்ளதாக அவ் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, இந்துக்கள் பற்றிய தவறான விமர்சனங்கள் பாடப் புத்தகங்களில் உள்ளதாகவும், அவர்களை இஸ்லாமியர்கள் எதிரிகளாக சித்திரிக்கப்படுவதுடன், இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளே மேலோங்கிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. _
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34849
No comments:
Post a Comment