Translate

Wednesday, 9 November 2011

தென்மராட்சிப் பகுதியில் இரு கோயில்கள் உடைத்து கொள்ளை!


தென்மராட்சிப் பகுதியில் இரு கோயில்கள் உடைத்து கொள்ளை!

தென்மராட்சிப் பகுதியில் இரு கோயில்கள் உடைத்து அங்கிருந்த விக்கிரகங்கள், குத்து விளக்குகள், செம்புகள், தீபங்கள் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி மீசாலை தெற்குப் பகுதியில் உள்ள பூதவராயர் மற்றும் கரும்பிமாவடி கந்தசாமி கோயில் ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரங்கள், குத்து விளக்குகள், செம்புகள், தீபங்கள் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளது.

மேற்படி இரு கோயிலிலும் திருடியது ஒரே கும்பல் என்றும் இரு கோயில்களுக்கு மிக அன்மையில் இராணுவக் காவலரண் உள்ளது என்றும் திருட்டுச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வழமைக்கு மாறாக மேற்படி இரு கோயில்களின் முன்னால் அதிக நேரம் இராணுவத்தினர் நின்றனர் என்றும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் யாழில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment