Translate

Thursday 15 December 2011

50 தமிழ் அகதிகளை நாடு கடத்தும் பிரித்தானியா

பலவந்தமான முறையில் 50 இலங்கை புகலிடக் கோரிகையாளர்கள் பிரித்தானியாவிலிருந்த நாடு கடத்தப்பட உள்ளதாகத் ‘கார்டியன்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய எல்லை முகவர் நிலையத்தினால் பலவந்தமான முறையில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த இலங்கையர்கள் தனி விமானம் மூலம் இன்று மாலை அனுப்பி வைக்கபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் சித்திரவதைகளுக்கு உட்படலாம் என மனித உரிமை அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
 
கடந்த ஜூன் மாதத்தின் பின்னர் இரண்டு பாரியளவிலான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தல்களை பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் பாரியளவிலான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை, பிரித்தானியா பலவந்தமாக நாடு கடத்தியிருந்தது.
 
இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரித்தானிய தன்னார்வ தொண்டு சிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.
 
நாடு கடத்தப்பட உள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு காச நோய் இருப்பதாகவும், அவருடன் பயணிக்கும் ஏனையவர்களுக்கு நோய் பரவக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு வழிகளில் சித்திரவதைகளை மேற்கொள்வதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக சிலர் தாமாகவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு அனுதாபம் தேடுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரை ஆதாரம் காட்டி பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=15884&v=121

No comments:

Post a Comment