Eelamranjan Eelamranjans
வன்னியில் வாழும் தமிழ் மக்களில் உடல்வலுவற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு உதவுவதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தையும் பெற்று ஏமாற்றியுள்ளார் ஒரு தமிழ் பெண்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உதவிக்கு யாருமற்ற நிலையில் கொடிய வாழ்வை அனுபவித்து வரும் வன்னி மக்களிடம் கனடாவில் இருந்து சென்றதாகக் கூறப்படும் உதயகலா எனும் பெயருடைய தமிழ் பெண் அங்குள்ள உடல் வலுவற்றோருக்கு தான் உதவ விரும்புவதாகவும் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று அவர்களுக்கு நல்ல வாழ்வை கொடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதே வேளை அதற்கான முழுச்செலவினையும் தான் பொறுக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் ஒவ்வொருவரும் இலங்கை ரூபா 300,000 (மூன்று இலட்சம்) தரும்படியும் மீதிப் பணத்தை தான் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக உடல் வலுக் குறைந்த முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை உடனடியாக வெளிநாடுகளிற்கு கூட்டிச்செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை அப்படியே நம்பிய மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் பணத்தை திரட்டி அப்பெணிடம் கொடுத்து தம் பிள்ளைகளை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அம் மக்கள் கோரியுமுள்ளனர்.
உடனடியாகவே தான் உண்மையானவள் என காட்டும் பொருட்டு உடல்வலுக் குறைந்த 6 பேரை கொழும்பு கொண்டு சென்று அங்கிருந்து வேறொரு நாட்டிற்கும் ஏற்றி அனுப்பியுள்ளார். இவர்களை அனுப்பியது போன்று மற்றவர்களையும் அனுப்பிவிடுவேண் என சுமார் 32 உடல்வலுவற்றோரின் பெற்றோரிடமும், உறவினர்கள், நண்பர்களிடமும் தலா மூன்று இலட்சம் படி பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் உதயகலா.
வெளியில் கொண்டு செல்லப்பட்ட 6 பேர் கூட மேற்கு நாடுகளுக்கோ அன்றி ஐரோப்பிய நாடுகளுக்கோ அனுப்பப்படவில்லை. அவர்களும் இடைநடுவில் மொழியும் தெரியாது, பணமும் இல்லாது உதவிக்கு யார் வருவார் என்ற ஏக்கத்தோடு காத்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் தற்சமயம் தங்கியுள்ள நாடு எது என்பதை இங்கு தவிர்க்கிறோம்.
இது போன்று இன்னும் பலர் எதிர்காலங்களில் ஏமாற்றப்பட்டக்கூடாது என்பதற்காக இதனை இங்கு தருகிறோம்.
மக்களே விழிப்பாய் இருங்கள்!
எதைச் செய்யும் முன்பும் ஒன்றிற்கு பலதடவை யோசனை செய்யுங்கள்!
முக்கியம் முகம் தெரியாத நபர் உதவுவதாகக் கூறினால் அவர் தொடர்பாக நன்கு ஆராயுங்கள்!
வாழ்விடம் இழந்து, வசதிகள் இழந்து தவிக்கும் நீங்கள் உங்கள் பிள்ளைகளையும், உறவுகளையும் இழக்காமல் முன் எச்சரிக்கையோடு நடவுங்கள்!
தலைமறைவாகியுள்ள இப்படத்தில் காணப்படும் பெண்ணை யாராவது கண்டாலோ அன்றி இவர் தொடர்பான விபரங்கள் தெரிந்தாலோ உடனடியாக அதை கீழ்க்காணும் எமது மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துமாறு தாழ்மையுடம் கேடுக்கொள்கின்றோம். நீங்கள் தரும் தகவல்களை நாம் உரிய இடத்திற்கு தெரியப்படுத்துவுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
tamilnews4u@yahoo.com

No comments:
Post a Comment