கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இன்று காலையில் இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கனக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். இந்த நிகழ்ச்சியை தினமலர் இணையதளம் நேரிடையாக ஒளிபரப்பு செய்தது. இதன்மூலம் வெளி நாட்டு வாழ் பக்தர்கள் பெரும் பயன் அடைந்ததாக மெயில் தினமலருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளனர். திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகாவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.................. read more
No comments:
Post a Comment