நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ, ஜெயலலிதா வையோ, கூட்டங்களில் விமர்சித்து பேசவில்லை.
தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
இதற்கிடையில் வடிவேலு அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரும், அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
இப்ராகிம்ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார்.
பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். மூப்பனாருக்கு நெருக்க மானவராகவும், இருந்தார். இப்போது அவர் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார்.
வடிவேலுவும், இப்ராகிம் ராவுத்தரும் நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேருவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இணைப்பு விழா நடக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment