மாதுளம் பழம் உடல் நலனுக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்துள்ளது. தற்போது அது சர்வரோக நிவாரணி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பிரித்தானியாவிலுள்ள ராணி மார்க்ரெட் பல்கலைக்கழக விஞ்ஞானி டொக்டர் எமாட் அல் துஜாலி கூறும்போது, மாதுளம் பழம் நோய் தீர்க்கும் இயற்கை மருந்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்றும் அதே நேரத்தில் பாலியல் பிரச்சினைகளையும் இது தீர்க்கும் என்றும் தெரியவந்துள்ளது.
தாவரங்களில் பொதுவாகவே புனிகாலஜின்ஸ் என்ற சத்துப்பொருள் உள்ளது. அது மாதுளம் பழத்தில் மிக அதிகமாக உள்ளது. எனவே இது அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் தெரியவந்துள்ளது என்றும் துஜாலி தெரிவித்தார்.
No comments:
Post a Comment