Translate

Friday 2 December 2011

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிராகரித்தது கூட்டமைப்பு

விளக்கினார் சம்பந்தன்
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது. நேற்று அரசுடன் நடந்த பேச் சின்போது இவ்வழைப்பு விடுக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்தார். அரசு,கூட்டமைப்புடன் நேற்று நடத்திய பேச்சுவார் த்தைகளின் போது, இந்த யோசனையை முன்வைத்தது.
ஆனால், இரு தரப்புக்களுக்கும் இடையே தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் முடிபில் காணப்படும் இணக்கப்பாட்டை இந்தத் தெரிவுக்குழுவின் முன்வைத்து, அதன் பின் அந்தக் குழுவில் அதைப் பரிசீலிக்கும் போது அதில் பங்குபெறுவது குறித்து யோசிக்கலாம்.

இதுவரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டு விட்டதாக சொல்லமுடியாது. ஆனால் எந்த வி­யங்களைப் பற்றிப் பேசவேண்டும் என் பது குறித்து கண்டறியப்பட்டிருக்கிறது என சம்பந்தன் தெரிவித் தார். அரசுடன் இடம்பெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் ஓர் இணக்கப்பாடு காணப்படாது பேசப்படவேண்டிய விடயம் பட்டியல் படுத்தப்பட்டு பேசுவதற்கு முடிபெடுக்கப்பட் டிருக்கின்றமை, தெரிவுக் குழுவைப் பொறுத்த வரை பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்து காலத்தை நீடிப்பதற்கு முன்னெடுக்கும் செயற்பாடாக காணப்படு கின்றது.

எமது நிலைப்பாடு என்னவென்றால் இருதரப்பிலும் இடம்பெறும் பேச்சுவார்த்தை மூலமாக இணக்கப்பாடு காணப் படவேண்டும். இவ் இணக்கப்பாடு தெரிவுக் குழுவுக்கு முன்னால் வைக்கப்பட்ட பிறகுதான் நாம் தெரிவுக்குழுவில் சமுகமளிப்பது பற்றி முடிபெடுக்க முடியும் என நாம் அரசிடம் தெளிவாகக் கூறியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment