Translate

Thursday 15 December 2011

தமிழ்தேசியக்கூட்டணி "ஒன்றிணைந்த" மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவது சரியா தவறா?

தமிழ்தேசியக்கூட்டணி "ஒன்றிணைந்த" வடக்குக்கிழக்கு மாகாணத் தேர்தலில் பங்குபற்றுவதுதான் சரியானது. 

1995ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற பாரிய இடப்பெயர்வுக்குப்பின் இன்றுவரை யாழ்ப்பாணம் எமது கையில் இல்லை.ஏறைகுறைய 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் சிங்களவனின் கையில். அன்று நாம் ஆயுத பலத்துடன் இருந்தும்கூட மீட்கமுடியவில்லை. இன்று புலம்பெயர்ந்த‌ நம்மிடம் நம்பிக்கையைத்தவிரவேறொன்றும் இல்லை. தாயகத்திலுள்ளவர்களிடம் அந்த நம்பிக்கைகூட இல்லை. 



அவர்களிடம் எஞ்சி இருப்பது வாக்குரிமை ஒன்றுதான். இதை இழப்போமானால் அல்லது  தேர்தலைப் புறக்கணிப்போமானால் வடக்குக்கிழக்கில் தமிழன் என்ற ஒரு இனமே இருக்காது. சிங்களவனின் பெரும்பான்மைக் குடியேற்றத்தினால், நீர்கொழும்பு, சிலாபம் போன்று யாழ்மக்களும் சிங்களத்தையே தாய்மொழியாக்கி அசல் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள்.


ஆனால் எங்களிடம் ஒரு இடைக்கால ஆட்சியிருக்குமானால் இதைத் தடுக்கலாம்.இல்லையேல் எமது நிலை சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாகிப்போய்விடும்.இன்றும் ஓரளவு இதே நிலைதான். அங்குள்ள பெரும்பான்மையான மக்களுக்கு சிங்களம் அத்துபடி. அத்துடன் கலாச்சாரச் சீர்கேடு வேறு.இன்று டக்கிளசின்ர ஆட்சியில் தீவுப்பகுதிக்கு கூட்டணியினால் கால்வைக்கவே முடியாது.அன்று தீவுப்பகுதி கூட்டணியின் கோட்டை. தேர்தலைப் புறக்கணித்து மாகாண ஆட்சியை இனத்துரோகிகளிடம் கொடுத்தால் நிலையென்ன? வெளிநாடுகள் நம்மைப்பார்த்து மீண்டுமொருமுறை குற்றப்பத்திரிகை வைக்குமா, வைக்காதா?

முதலில் அங்கு அனைத்தையும் இழந்து அனாதரவாக நிற்கும் மக்கள் உயிர்வாழ்வதற்கு ஒன்றிணைந்த‌ மாகாண நிர்வாகத்தின்மூலம் வெளிநாட்டு உதவிகளுடன் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு வடக்குகிழக்கு ஒன்றிணைந்த‌ மாகாண ஆட்சியைக் கூட்டமைப்பிடம் கையளிப்பதற்கு வேண்டியதைச் செய்வோம். அதன்பின் தளமும் புலமும் ஒன்றுபட்டு "அந்நியனே வெளியேறு"! என்ற தாரகமந்திரத்தை காந்தித்தாத்தாபோல்  கையிலெடுத்து அந்நியனை வெளியேற்றி எம் சுதந்திர பூமியைப் பெற்றிடுவோம்.

கணபதி

No comments:

Post a Comment