முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலரும், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவருமான நிருபமா ராவின் மகனின் திருமணத்திற்கு சிறிலங்காவில் இருந்து பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட பலரும் பெங்களூர் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிருபமா ராவின் மகனின் திருமணம் கடந்தவாரம் பெங்களூரில் இருந்து ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள தாஜ் விடுதியில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் பங்கேற்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, அவரது மனைவி, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, அவரது மனைவி, பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் திருக்குமார் நடேசன், சுகந்தி கதிர்காமர், வர்த்தகர் திலக் சொய்சா, நிருபமா ராவின் சங்கீத ஆசிரியை சுந்தரி டேவிட், அவரது தாய் உள்ளிட்ட பலரும் சிறிலங்காவில் இருந்து சென்றிருந்தனர்.
தானே புயல் காரணமாக விமான நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டதால் இந்தத் திருமணத்துக்குச் சென்ற விருந்தினர்கள் அவசர அவசரமாக திரும்பினர்.
எனினும் சிறிலங்காவில் இருந்து சென்றவர்கள் பாதுகாப்பாக கொழும்பு திரும்பியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இளநிலை அதிகாரியாகவும், பின்னர் இந்தியத் தூதுவராகவும் தமிழ் ஈழ போராட்டத்துக்கு எதிராக பணியாற்றிய நிருபமா ராவ், நெருக்கடியான வேளைகளில் சிறிலங்காவுக்கு பக்க பலமாக இருந்தவர்.
சிறிலங்கா அதிபர் மற்றும் அரசுடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் நிருபமா ராவ், கடந்து ஆண்டு இந்திய வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவரை சிறப்பு விருந்துக்காக கொழும்புக்கு அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவருமான நிருபமா ஏதோ ஒருவழியில் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கு எதிராக அமெரிக்காவிலும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்

No comments:
Post a Comment