Translate

Monday, 2 January 2012

ராஜபக்சேவை காப்பாற்றும் மத்திய அரசு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

மத்திய அரசு இலங்கை அதிபர் ராஜபக்சேவை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.


ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து ஐ.நா. நிபணர் குழு ஆய்வு
செய்து அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று அறிக்கையும் சமர்பித்தது.

அதற்கு பிறகும் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த முடியவில்லை. இது குறித்து மத்திய அரசும் எந்தவித முயற்சி செய்யவில்லை. மாறாக ராஜபக்சேவை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகிறது என்றார்

No comments:

Post a Comment