| ஜெனீவாவில் அரசை எதிர்க்க கூட்டமைப்பும் தயாராகிறது |
![]()
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் சுமத்தப்படவிருக்கும் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து அரசை காப்பாற்றுதவற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் பங்குகொண்டு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இதற்கான முழு முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
மார்ச் மாத இறுதியில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இடம் பெறவுள்ளது. இதில் இலங்கையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று மேற்குலக நாடுகள் பலவும் வலியுறுத்த காத்திருக்கின்றன.
இது தொடர்பான பிரேரணை ஒன்று கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்ற விடயமும் இலங்கை அரசுக்கு தெரியப்படுத் தப்பட்டுவிட்டது.
அந்த பிரேரணையின் விவாதத்துக்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருக்கிறது..
இந் நிலையில் ஜெனிவாவில் அரசுக்கு எதிரான கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் "உதயனுக்கு' தெரிவித்தார்.
தமிழர் தரப்பு நியாயங்களை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்வதற்காகவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளனர். இதில் தலைவர் சம்பந்தன் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்வர் என்றார்
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 31 January 2012
ஜெனீவாவில் அரசை எதிர்க்க கூட்டமைப்பும் தயாராகிறது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment