| விடுதலைப் புலிகள் மீதான தடை தமிழக அரசுக்குக் கால அவகாசம் |
![]()
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடையை நீக்குவது தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் இந்திய மத்திய அரசால் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தான் கருத்து தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள தீர்ப்பாயம் மறுத்ததால், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக்அரசின் சார்பில் முன்னிலையான சட்டவாளர் நவநீதகிருஷ்ணன், இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறினார்.
அதற்கு, மனுதாரர் வைகோவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 31 January 2012
விடுதலைப் புலிகள் மீதான தடை தமிழக அரசுக்குக் கால அவகாசம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment