Translate

Monday, 2 January 2012

புத்தாண்டில் விடுதலையும் சமாதானமும் உங்களில் பிறப்பதாக!

ஒரு புதிய ஆண்டின் முதல் நாள் உலக சமாதான நாளாக பிரகடனப்பட்டுள்ளது.
பிறக்கும் புதிய ஆண்டு 2012 மனுக்குலம் முழவதற்கும்விசேடமாக ஆறு பத்து ஆணடுகளாக அழிவுக்கு மேல் அழிவைச் சந்தித்துமனித மாண்பிற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சமாதானத்திற்காகவும் தாகிக்கும்ஈழத் தமிழர்களுக்கு இந் நாளின் செய்தி என்ன?
மனித மாண்பும், மனித உரிமைகளும,; சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் -இவைகள் இறைவனால் ஆரம்பத்திலேயே மனிதனுக்கு இனாமாகக் கொடுக்கப் பட்டவை.இவைகள் மதித்து நடந்தால் நீதியான உண்மையான சமாதானம் பிறக்கும்.ஆனால் மனிதனில் பல வித தீய சக்திகள் ஊற்றெடுத்துமனுக்குலத்தை பிழையான பாதையில் தள்ளுகின்றன.மனித மாண்பு, மனித உரிமை, சமத்துவம், சகோதரத்துவம்இவைகளை அவ மதிப்பதும,அழிப்பதும், அடக்கு முறைகளில் ஈடு படுவதும்மனித உருவத்தில் செயற் பட்டுக் கொண்டிருக்கும் தீய சக்திகளே.


என்று மனிதன் இத் தீய சக்திகளை சரியாக இனங்கண்டுஅவைகளுக்கெதிராக போராடகின்றானோ, அன்று தான் சமாதானம் தோன்றும்.எம்மை எதிர்ப்பவர் எல்லோரையும் இத் தீய சக்திகளாக இனங்காண்பதோஅவர்களுக்கெதிராக மாத்திம் போராடுவதோ பெரும் தவறு.மனித மாண்பை உரிமைகளை அவமதித்து எமது இனத்தை அளிப்பதில்எமக்குள்ளேயும் ஏராளமான தீய சக்திகள் செயல் படுகின்றன.


ஒரு பகுதியை மாத்திரம் முழமையான தீய சக்தியாகக் கணித்துப் போராடுவது தவறு.ஆகையினால் உண்மையான நீதியான சமாதானம் இப் பூமியில் தோன்றுவதென்றால்நாம் அச் சமாதானத்தை எம்மில் ஆரம்பிக்க வேண்டும்.அதே போல் உண்மையான நீதியான விடுதலை வேண்டுமாயின்நாம் அவ் விடுதலையை எம்மில் ஆரம்பிக்க வேண்டும்.சுய அமைதியே உலக சமாதானத்தை நோக்கிய முதற் படி,சுய விடுதலையே ஈழ விடுதலைக்கான முதற் படி.சுய போராட்டமின்றி அரசியல் போராட்டம் மாத்திரம் நடாத்துவது வீணிலும் வீண்.
ஆகையினால், எனது அன்பான, சகோதர சகோதரிகளே!
பிறக்கும் புதிய ஆண்டில் உண்மையான சமாதானத்திற்காகப் போராடுவோம்நீதியான முறையில் எமது மாண்பையும் மனித உரிமைகளையும் வென்றெடுப்போம்.எம்மில் ஊறியிருக்கும் அடிமைத்தனங்களை தெளிவாக இனங் கண்டுதுணிவாகக் களைவோம், வீரத்துடன் செயல் படுவோம்.


எம்மைப் படைத்த இறைவன்,எமக்கு இனாமாக அளித்த அத்தனை மனித விழுமியங்களையும் மீன்றெடுக்கஎமக்கு ஆன்மீக சக்தி அருள் தருவார்.சமாதானமும் விடுதலையும் உங்களிற்கும் உங்கள் குடும்பங்களிற்கும் வருவதாக!!!பணியாளன்


எஸ்.ஜே. இம்மானுவேல்
ஜேர்மனி, 31.12.2011

No comments:

Post a Comment