வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லையென்ற விரக்தி இலங்கையில் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளதென இந்திய ''டெக்கான் குரோனிக்கல்'' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் செய்தியாளர் பகவான் சிங் இலங்கையில் மேற்கொண்ட விஜயத்தை அடுத்து வரைந்திருக்கும் வடக்கு நிலவரம் சம்பந்தமான கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற மேற்படி செய்தியாளர் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
மீள்குடியேற்றம், இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்த கருத்துகளையும் அவர் தனது கட்டுரையில் உள்ளடக்கியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தான மக்களின் மன நிலையையும் அவர் கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இறுதிக்கட்ட ஈழப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா அழுத்தங் கொடுக்கவில்லை என்ற விரக்தி தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் இந்தியாவின் அசமந்தப்போக்கு அதிருப்தியையும், ஆத்திரத்தையும் கிளறிவிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்தால், அவர் இந்தியாவைக் கைகழுவி விட்டு, சீனாவின் குடைக்குள் புகுந்துகொள்வார் என இந்தியா கவலை கொண்டுள்ளது.
அதேவேளை, ராஜபக்ச சீனாவின் மடியிலேயே அமர்ந்தவாறு உள்ளார் என கொழும்பிலுள்ள சிரேஷ்ட இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.
இந்த சிரேஷ்ட இந்திய அதிகாரி நீண்ட காலமாக இலங்கை அமைச்சு மட்ட விவகாரங்களைக் கையாண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment