Translate

Monday, 30 January 2012

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுக்கு சிறிலங்காவின் பிரதிஅமைச்சர் கருணா எச்சரிக்கை

Posted Imageமாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்ற கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது.



அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர்.

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக் கொண்டே அதனுடன் முரண்பட்டால், அது சந்திரகாந்தனுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்“ என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
http://www.puthinapp...?20120130105474 

No comments:

Post a Comment