Translate

Sunday, 1 January 2012

தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனையால் தமிழீழ மக்கள் சுவாச நோயால் பாதிப்பு!


newsதமிழீழத்தில் இறுதிப் போரின் போது சிறீலங்காப் படைகளினால் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனையால் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90சத வீதமானவர்கள் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரித்துள்ளார்.
இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதிய வகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்கு இந்த மக்கள் உள்ளாகியிருப்பதாக யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்களிடையே மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரின்போது சனத்தொகை அடர்த்தியான பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, உலகி தடை செய்யப்பட்ட குண்டுகளை விமானப் படையினர் பொதுமக்கள் அடர்த்தியான குடிமனை மீது வீசியமையால் இந்தப் பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
எறிகணை வீச்சுக்களின் போதும் அவற்றின் வெடிப்பின்போதும் அதிலிருந்து கிளம்பும் மண் துகள்கள் மற்றும் நுண்ணிய வெடி மருந்து துகள்கள் ஆகியவற்றை சுவாசித்ததன் மூலம் இலட்சக்காணக்கான மக்கள் இந்த நோயினால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நோயின் தாக்கத்திற்குள்ளான மக்களின் உடலில் மணல் மற்றும் வெடிமருந்து துகள்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை யாரும் நேரில் அறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் மேலும் கூறினார்.
இந்தநோயினால் பாதிக்கப்பட்டவர்களை புற்றுநோய் காசநோய் சுவாசஅலட்சி என்பன எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இந்தநோயின் தாக்கம் மிக சிலரிலேயே உடனடியாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்தநோயின் தாக்கம் வெளியில் தெரியவர 20வருடங்கள் கூட எடுக்கலாம். ஏரிமலை அபாயம் உள்ள பகுதி மக்களையே இந்நோய் பெரும்பாலும் தாக்கியுள்ளதாகவும் எரிமலை வெடிப்பின்போது அதிலிருந்து வெளியாகும் தூசி மண்டலம் மற்றும் நுண்துகள்களை சுவாசிக்கும் மக்கள் இந்தநோயின் தாக்கத்திற்குள்ளாகியிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment