Translate

Monday 13 February 2012

லண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ?


சிவராத்திரி விரதம் பின் வரும் அடிப்படையை வைத்து கணிக்கப் படுகிறது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நள்ளிரவில் கூடியுள்ள நாள். நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டில் உள்ள திதிப் படியே கடைப் பிடிக்க வேண்டும்.

இரவு லிங்கோத்பவ காலத்தில் அதாவது சுமார்  நள்ளிரவு 12-00 மணி முதல் 01-30 வரையுள்ள காலப்பகுதியில் சதுர்த்தசி திதியும் திருவோண நட்சத்திரமும் சேர்ந்திருப்பது அதி விசேடம்.

இந்த வகையில் நோக்கினால் லண்டன்  முதலான ஐரோப்பிய நாடுகளுக்கு பெப்ருவரி 19ம் திகதி ஞாயிறுக்கிழமையே  சிவராத்திரி சைவ சமய மக்களின் மூலப் பரம்பொருளான சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையான விரதமாகப் போற்றப்படும் சிவராத்திரி விரதம் உரிய நாளில் பின்பற்றப்படுவதே முழுமையான பலனைத் தரும். 


     சிவராத்திரி விரதம் பின் வரும் அடிப்படையை வைத்து கணிக்கப் படுகிறது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நள்ளிரவில் கூடியுள்ள நாள்.
பகலில் திரயோதசி திதியும் இரவில் சதுர்த்தசி திதியும் கூடியுள்ள நாள் (காரண ஆகமம்)                                                                        
இரவில் இரண்டு சாமத்திற்கு மேல் அல்லது முழு இரவும் சதுர்த்தசி உள்ளதோ அன்றுதான் சிவராத்திரி அனுஸ்டிக்கப் படவேண்டும்.என குமார தந்திரம் கூறுகிறது.

பகலில் திரயோதசி திதியும் இரவு சதுர்த்தசி திதியும் சேர்ந்த நாளே சிவராத்திரி விரதம் ஆனால்  பகலில் சதுர்த்தசி திதியும் இரவு அமாவாசையும் கூடியிருந்தால் விரதம் . அனுஷ்டிக்கப்படாது.என காலோத்திரம்  என்னும் நூல் கூறுகிறது.

திரயோதசி திதி இரவில் அதிகம் இருந்து சொற்ப நேரம் சதுர்த்தசி விரதம் இருந்தாலும் அன்று சிவராத்திரி விரதம் எடுக்கலாம் ஆனால்  சதுர்த்தசி திதியும் அமாவாசையும் கலந்த நாள் எடுக்கக் கூடாது.என்று காரானாகமம் கூறுகிறது.

லண்டனுக்கு என்று கணிக்கப்பட்ட திருக்கணிதம், வாக்கியம் ,தாய் நாட்காட்டி அனைத்திலும் பெப்ருவரி 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமையே சிவராத்திரி விரதம் குறிப்பிடப் பட்டுள்ளது  ஏனெனில் 19ம் திகதி 11-30 மணிக்கு மேல் சதுர்த்தசியும் திருவோணமும் கூடயுள்ளது.  நேர வித்தியாசத்தால் இலங்கை இந்திய நாடுகளுக்கு அடுத்த நாளே அதாவது 20ம் திகதி திங்கள்கிழமையே மேற்படி திதியும் நட்சத்திரமும் நள்ளிரவு கூடியிருக்கிறது.ஆகவே அவர்கள் அடுத்தநாளே செய்ய வேண்டும்ஐரோப்பிய நாடுகளுக்கு 20ம் திகதி இரவு 10 மணிக்கு மேல் அமாவாசை . கூடிவிடும்.

இங்கிலாந்தில் உள்ள பேர்மின்காம் உட்பட அனைத்து ஆலயங்களும் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமையே சரியான முறையில் சிவராத்திரி அனுஷ்டிக்கிறார்கள். இந்திய நேரத்தின்படி செய்பவர்கள் மறுநாள் செய்வார்கள் அது காலாவதியான பொருளைப் பாவிப்பதற்கு சமனாகும்.

No comments:

Post a Comment