சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள்சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான்கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன்மூலம் சொன்னார், அமெரிக்க சொல்கிறது- கனடா சொல்கிறது-பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது, பாதுகாப்புசபையில் இருக்கும் மூன்று நாடுகள் சிறி லங்காவில் நடைபெற்றஇறுதிகட்ட போரில் நடந்த படுகொலைகள் பற்றி சர்வதேசவிசாரணை குழு ஒன்று முலம் விசாரிக்க வேண்டும் என்றுகூறுகிறது. அத்துடன் நிற்காமல் சர்வதேச ஊடகங்கள் கூறுகிறது,சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறுகிறது, சர்வதேசஅரசசார்பற்ற அமைப்புகள் கூறுகிறது.
சிறி லங்கா அரசின் கற்று அறிந்த பாடங்கள், நல்லிணக்கஆணைக்குழுவின் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை என்றுகூறி இருக்கிறார்கள், இதன் அடிப்படையில் சிறி லங்கா அரசு ஒருகுற்றமிழைத்த நாடாகவே பார்க்க படுகிறது. சிறி லங்கா போர்குற்றம், மனித நேயத்திற்கு எதிராக குற்றம் இழைத்த நாடு என்றுஇந்த உலகமே கூறி நிற்கும் போது- சிறி லங்காவை சர்வதேசவிசாரணையில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு சபையில்இருக்கும் ரஷ்யா, சீனாவும், இந்திய போன்ற நாடுகளும்முன்னிலையில் நிற்கின்றன.
இந்த சர்வதேச போட்டியில் தமிழர் நாம் சிக்கி நிற்கின்றோம்.
இன்று உலகமே சிறி லங்கா குற்றமிழைத்த நாடு என்று கூறிஇருக்கும் நிலையில் சிறி லங்கா போர் குற்றம் மட்டும்இழைக்கவில்லை 1948யில் அல்ல 1917யில் இருந்து சிங்களதேசிய இனவாதிகளால் ஒரு திட்டமிடப்பட்ட செயல்பாட்டில்தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
யூதர்கள் எப்படி 1948யில் இருந்து பாலஸ்தீன மக்களை தமதுநிலங்கள், குடிமனைகளில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள்நிலங்களில் காலனிகளை உருவாக்கினார்களோ அதேவடிவத்தை நாம் சிறி லங்காவில் பார்க்க கூடியதாக இருக்கிறது.
சிறி லங்காவில் 1948யில் ஆரம்பித்த இனவாத படுகொலைகள்சிறி லங்கா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தொடர்ச்சியான இனஅழிப்பு, சிங்களமயப்படுத்தல், 2009யில் முள்ளிவாய்காலில்ஆயுதப்போராட்டத்தின் முடிவின் பின் உச்ச நிலையைகண்டுள்ளது.
இதே நிலை 1967யில் பாலஸ்தீன மக்களின் ஆயுதப்போரட்டத்தின் முடிவின் பின் இஸ்ரேல் அரசின் யூதமயமாக்கலின் உச்சகட்டத்தில் பாலஸ்தீன மக்களிடம் இன்றுஅவர்களின் நிலப்பகுதியில் 18% தான் பாலஸ்தீன மக்களின்கையில் உள்ளது.
1948யில் இருந்து சிறி லங்காவில் தமிழர்களுக்கு என்ன நடந்தது?
அங்கு நடந்தது ஒரு இனத்தை அடியோடு அழிக்கும் நீண்டகாலசெயல்திட்டம். சிறி லங்கா சரித்திரத்தில், மகாவம்சத்தில்எழுதப்படாது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. சிறி லங்காவில்நடந்தது, நடந்து கொண்டு இருப்பது ஒரு இனப்படுகொலைஎன்பதை இன்று நாம் உரத்து கூறவேண்டி காலம். இலையேல்பாலஸ்தீன மக்கள் போல் 18% நிலப்பகுதியில் வாழும் அளவுக்குதமிழர்கள் நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
உலக தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், சிறி லங்காஒரு குற்றமிழைத்த நாடு என்று எல்லோரும் ஏற்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் நாம் சிறி லங்காவில்தமிழர்களை முற்றாக அழிக்கும் இனப்படுகொலை நடந்துகொண்டிருகிறது. உலத்தில் பல பகுதிகளில் நடந்துமறக்கப்பட்டிருக்கும் பல இனப்படுகொலைகளில் தமிழர்களின்இனப்படுகொலையும் ஒன்றாக மாறிவிடக்கூடாது.
உலகத்தில் மிகவும் பழமையான இனம், பழமையான கலாச்சாரம்,பழமையான நாகரீகம்- தமிழர் அழிந்து விட நாம் காரணமாகஇருந்து விடகூடாது.
சிறி லங்காவில் நடைபெறும் இனப்படுகொலையை தடுக்கவும்,சர்வதேசம் தமிழர்களுக்கு நடந்து கொண்டிருப்பதுஇனப்படுகொலை என்பதை வலியுரத்தவும், தமிழர்களைபாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேசத்தினது என்பதைவலியுறுத்தி நாம் எமது மவுனம் கலைத்து போராடுவோம்.
பெப்ரவரி 4! சிறி லங்காவின் சுதந்திர தினம்!
பெப்ரவரி 4 சிறி லங்காவின் இனப்படுகொலை தினமாகமாற்றுவோம். எல்லோரும் ஒரே குரலாக பெப்ரவரி 4 சிறிலங்காவின் இனப்படுகொலை தினம் என்று வலியுறுத்துவோம்.
தமிழீழ மக்களை குற்றவாளியின் கையில் இருந்து விடுதலைசெய்ய ஒரே குரல் கொடுப்போம்.
வடக்கு கிழக்கு தமிழீழ பிரதேசங்களை மீண்டும் இணைக்க குரல்கொடுப்போம்.
No comments:
Post a Comment