VIDEO: http://youtu.be/ BgAPcuOjGuQ
( or you can get from: http://www.youtube.com/ tamilnews4u
நேற்று லண்டனில் நடைபெற்ற முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingstonஉடனான தமிழ்மக்களின் சந்திப்பு.
முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) உடனான தமிழ் மக்களின் சந்திப்பு நேற்று லண்டன் ஹறோ பகுதியில் அமைந்துள்ள Harrow Civic Centre மண்டபத்தில் நடைபெற்றது.
தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் (Tamils for Labour) ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு நேற்று காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1:30 மணிவரை வரை நடைபெற்றது.
இச்சந்திப்பில் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London), Rt Hon.Joan Rayan (Ex Home office Minister), Dawn Butler (Ex Youth Minister), Naveen Shah (GLA Member), Dr.Onkar Sahota (GLA Candidate for Ealing and Hillingdon), Mr. Sen Kandiah (Tamils for Labour) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் கடந்த ஒரு வாரமாக ஜெனீவாவில் தங்கிநின்று ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுடன் இணைந்து தமிழர் தரப்பு பிரச்சனைகளை எடுத்துரைத்து தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் Rt Hon. Joan Rayan (Ex Home office Minister) அவர்கள் கூறுகையில்…
தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் இழைக்கப்பட்ட அனீதிகள் தற்போது தான் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு தமிழர்களஅகிய நீங்கள் அனைவரும் எடுத்த கடும் முயற்சியே காரணம். அத்தோடு தற்போது நான் ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களாக பங்குபற்றியிருந்தபோது தமிழர் பிரதிநிதிகளாக அங்கு நின்று பலர் உழைப்பதை காணமுடிந்தது. குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், குளோபல் தமிழ் போரூம், பிரித்தானியத் தமிழர் பேரவை என்பன தொடர்ச்சியாக வேலைசெய்து வருகின்றனர்.
சன்ல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான விடையங்கள் தமிழர்தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது. ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இம்முறை சிறீலங்கா விடையமே முக்கிய இடத்தை பிடித்துள்ளமையால் ஒரு திருப்புமுனை வர நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தமிழர்கள் தங்களுடைய விடுதலையை பெறும் வரை, நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) கூறுகையில்…
தமிழர்களின் பிரச்சனையை, வேதனையை நான் நன்கு அறிவேன். உங்களுக்கான எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும். குறிப்பாக எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தான் மீண்டும் லண்டன் நகர முதல்வராகும் பட்சத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான நிகழ்வுகள், அமைதிவழிப் போராட்டங்கள் என்பவற்றிற்கான அனுமதி வழங்கப்படும் எனவும், அத்தோடு வருடத்தில் ஒரு நாள் தமிழர்களின் நாளாக பிரகடனப் படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதில் உரையாற்றிய Mr. Sen Kandiah (Tamils for Labour) அவர்கள் கூறுகையில் பிரித்தானியத் தொழில்கட்சியானது தமிழர்களின் பிரச்சனையை நன்கு அறிந்தவர்களாகவும், தமிழர்களுக்கு உதவத் தயாராகவு இருக்கின்றனர். கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் தொடர்ச்சியாக தமிழர்களுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும், வெளியுமாக குரல்கொடுத்துவருகிறார்கள். எமக்காக குரல் கொடுக்கும் இவர்களை தொடர்ச்சியாக பலமான பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டியது தமிழர்களின் கடமை. எனவே அவர்களின் ஒன்றுகூடல்களில் அதிகளவான தமிழர்கள் தொடர்ந்தும் பங்குகொள்ள வேண்டியதும், அவர்களை தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றிபெறச்செய்வதன் ஊடாகவுமே எமது பிரச்சனைகளுக்கான விடைகளை இலகுவில் கண்டறிய முடியும் என்றார்.
8வருடம் ஒன்றும் செய்ய முடியாத லிவிங்க்ஸ்டன் இப்ப என்ன செய்யப் போஹிரர். லிவிங்க்ச்டோனின் மூக்கு நீழப் போஹிறது
ReplyDeleteஎமது இனம் செத்து மடிந்த போது ஆட்சியில் இருந்தது தொழிற்கட்சியே என்பதை இங்கே குறிப்பிட விரும்புஹிறேன். இன அழிவை நிறுத்த முடியாத தொழிற்கட்சி இப்ப என்னவாம்?
ReplyDelete