Translate

Sunday 18 March 2012

தமிழ்தேசியஇனத்தின் பிரச்சனை பன்னாட்டு அரசியலாக மாறிஉள்ளது – சீமான் (ஒலி இணைப்பு)


பன்னாட்டு அரசியலாக தமிழ்தேசிய இனத்தின் பிரச்சனை மாறிஉள்ளது என்று  நாம்தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நேற்று சென்னையில் இடம்பெற்ற மக்கள் ஆய்வகத்தின் ஈழத்தமிழர் வாழ்வியல் பதிவுகள் ஆய்வரங்கதில் ஆய்வு கருத்தில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

இன்று போர்குற்றவிசாரணையினை ஏன்கேட்கின்றோம் என்றால் போர்குற்றம் அங்கு நடந்தேறியுள்ளது போர்குற்றம் என்ற சின்ன சாவியினை வைத்து உள்ளே போவோமாக இருந்தால் தொண்ணூறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று மனிதஉரிமைகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒன்றரைலட்சத்திற்கு மேற்பட்ட மரணம் அதில் எத்தனைபேர் கடத்தப்பட்டார்கள் எத்தனை பேர் பாலியல்தொல்லையில் படுகொலைசெய்யப்பட்டார்கள் எத்தனை பிஞ்சுக்குளந்தைகள் செத்திருக்கின்றார்கள் எத்தனை போர் இன்னும் முள்ளுக்கம்பிகளுக்குள் இருக்கின்றார்கள்,எவ்வளவு போர் விடுதலையாகிஇருக்கின்றார்கள் என்ற எந்தகணக்கும் தெரியவில்லை ஆகவே ஒரு பன்னாடுதழுவிய நீதி விசாரணை தேவைப்படுகின்றது அதுதான் போர்குற்ற விசாரணை அந்த போர்குற்ற விசாரணை என்கின்ற கதவினை திறந்தால் உள்ளே போனால் அது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்கின்றது தெரியவரும்
இதன்போது தான் இலங்கையில் இரண்டு இனங்களும் அரை நூற்றாண்டிற்கு மேலாக பகைஇனங்களாகமாறி இருக்கின்றது இனிமேல் இரண்டு இனங்களும் இணைந்துவாழ்வது என்பது தமிழர்களுக்கு சாத்தியம் இல்லை எனது கண்முன்னே எனது தங்கையினை பாலியல்சொய்து கொலைசெய்தவன் என்கண்முன்னே அப்பா அம்மாவை சுட்டுக்கொலை செய்தவனோடு கட்டித்தழுவி தமிழர் இணைந்து வாழ்வது சாத்தியம் இல்லை ஆகவே ஒரேதீர்வுதான் உள்ளது நோர்வே சுவிடன் பிரிந்ததுபோல்,கிழக்குதீமேர் மேற்குதீமேர் பிரிந்தது போல,சேர்பியா கொசோவா பிரிந்தது போல,தெற்கு சூடான் பிரிந்ததுபோல பன்னாட்டு சமூகம் முன்னின்று ஒருவாக்கெடுப்பு நடத்தவேண்டும்
ஒருங்கிணைந்த இலங்கை ஒற்றைஆட்சிக்குள்வாழ்கின்றீர்களா,தனித்தமிழீழ குடியரசாக மீள்கின்றீர்களா,என்ற வாக்கெடுப்பினை முன்வைக்கவேண்டு.அந்த மண்ணில் வாழ்கின்ற மக்களிடத்தில் ஒருகருத்துகணிப்பினை உருவாக்கவேண்டும் கிளிக்கு தங்கத்திலே கூடுசெய்துகொடுத்தாலும் அதில் தங்குவதா விடுவதா என்கின்ற உரிமை கிளிக்குத்தான் இருக்கின்றதே தவிர வெறுமனவே வெளியில் நின்று யோசியம் பாக்கின்றவர்களுக்கெல்லாம் அந்த உரிமை இல்லை இதுதான் தமிழர்களின்நிலமை.
தமிழர்களை அடிமையாக இருந்து வாழ் என்று சொல்வதற்கு எவருக்கும் அருகதை இல்லை ஒருநாட்டினை இரண்டாக பிரிப்பது பிரிவினை வாதம் என்றால் உலகத்தில் இத்தனை நாடுகள்எப்படி பிறந்தது எவராவது பதில்சொல்ல முடியுமா? ஆகவே இந்த இடத்தில் ஒரேவாய்ப்புத்தான் உள்ளது பன்னாடு தழுவி பன்னாட்டு நீதிவிசாரணை அந்தவிசாரணையின் மூலமாக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் அந்த வாக்கெடுப்பு வந்துவிட்டால் தனித்தமிழீழ குடியரசு பிறப்பதை எவரும் தடுத்துவிடமுடியாது.
இதற்கா 130 நாடுகளுக்கு மேற்பட்ட இடங்களில் பரவிவாழும் தமிழர்களில் குறைந்தபட்சம் ஒருகோடிதமிழர்கள் ஒரே அரசியில்குடையின் கீழ் திரண்டுவிட்டால் சாத்தியமாகும்விடயமாக மாறிவிடும் அதனை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டு செல்லவேண்டும்.
ஆகவே இந்த பொதுவாக்கெடுப்பிற்கு செல்வதற்கான முதல் முயற்சியாகத்தான் அந்த சாவியாகத்தான் இந்த போர்குற்றவிசாரணை இதற்குத்தான் இந்;தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழகத்தில் நாங்கள் கெஞ்சுகின்றோம் ஏன்இந்தியா தயற்கு கின்றது என்றால்? இந்திய அதிகாரிகள் அனைவரும் பேசியதை சிங்களஅரசு ஒலிப்பதிவு செய்துவைத்துள்ளது சிறீலங்கா போர்குற்றம் புரிந்தது என்று சொல்லி இந்தியா போர்குற்ற  விசாரணையினை ஆதரிக்குமாக இருந்தால் அதற்கான ஆதாரத்தினை சிறீலங்கா முன்வைக்கும் இந்திய அதிகாரிகளின் ஒலிவடிவத்தினை. இந்த போர்குற்றத்திற்கு குண்டும் நிதியும் கொடுத்தது இந்தியாதான் என்று சிறீலங்கா முன்வைக்ககூடிய ஆதாரங்கள் சிங்கள அரசிடம்உள்ளது ஆகவேதான் இந்த சின்ன நாட்டிற்கு  இந்தியா அஞ்சுகின்றது.அதுதான் காரணம் இந்தியா சிறீலங்காவிடம் வசமாக மாட்டியுள்ளது.
சிங்களவன் இதுவரையில் 550ற்கு மேற்பட்ட தமிழக கடல்தொழிலாளர்களை சுட்டுக்கொன்றுள்ளான்.
சிங்களவன் கொன்றதற்கு இந்தியாஅதிகாரிகள்தான் சிங்களவர்களை நாடிசெல்கின்றார்கள் சுட்டவன் இறுமாப்புடன் இருக்கின்றான்.இந்திய குடிமன்களை சுட்டுக்கொன்ற சிங்கள நாட்டுபடைக்கு சகமேம்பாட்டு பயிற்சியினை இந்தியா வழங்குகின்றது.தன்நாட்டு குடிமக்களை சுட்டுக்கொல்லும் நாட்டினை நட்புநாடாகவே இந்தியா வைத்துக்கொள்கின்றது என்றால் இந்தியாவினை தவிர வேறு எந்தநாடும் இவ்வாறு  நடந்துகொள்ளாது.
அழிவின் விளிம்பில் ஆதரவற்ற நிலையில் உள்ள அன்னைத்தமிழ் உறவுகளுக்கு இருக்கின்ற ஒரேவாய்ப்பு இந்த போர்குற்ற விசாரணைதான் அந்த விசாரணையின் மூலமாகத்தான் நாங்கள் இந்தனை இடர்களையும் தொர்ந்து பயணிக்க முடியும்.
தமிழின அழிப்பு பேரினை நடத்தியது இந்தியா தான் என்பது வெட்டவெளிச்சமாக தெரியும்.என்றும் சீமான் தனது ஆய்வரங்கில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment