வடக்கில் சிறிலங்கா அரசபடையினரின் அத்துமீறல்களை இந்திய நாடாளுமன்றக்குழுவினர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று தமிழ் மக்கள்
விரும்புவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும்நாடாளுமன்ற உறுப்பினருமானசுரேஸ் பிறேமச்சந்திரன் கொழும்புஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளுடனான போர்முடிவடைந்த பின்னர், சிறிலங்கா அரசபடையினரின் அடாவடித்தனங்கள்வடக்கில் அதிகரித்துள்ளன.
முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள்இடம்பெற்று வருகின்றன.
இறுதிப் போரின் போது இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தமக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படாமல் இடைத்தங்கல் முகாம்களில்அவல வாழ்க்கை நடத்துகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் உயர் பாதுகாப்புவலயம் முள்கம்பி வேலி போட்டுப் பலப்படுத்தப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்தில் குடியிருந்த மக்கள்அங்கு படிப்படியாக மீள்குடியமர்த்தப்படுவர் என்று சிறிலங்கா அரசு கூறியது.
ஆனால் இப்போது அங்கு முள்வேலியிடப்படுவது மக்களை விரக்தியில்ஆழ்த்தியுள்ளது.
மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது காணிகளைக் கூட சுத்தம் செய்வதற்குசிறிலங்கா கடற்படையினர் அனுமதிக்கவில்லை என முறையிடுகின்றனர்.
பௌத்த ஆலயங்களை அமைத்து அதற்கு அண்மையில் சிறிலங்காப்படையினருக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி, அவர்களை வடக்கில்நிரந்தரமாக குடியமர்த்தும் திட்டங்களை சிறிலங்கா அரசு முன்னெடுத்துவருகிறது.
சிறிலங்கா வரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கில் சென்றுஇவை குறித்து மக்களிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும்“ என்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment