Translate

Sunday, 26 February 2012

நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் அனுசரணையில் அனைத்து அமைப்புகளின் ஆதரவோடு கனடாத் தமிழர் இணையம் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள் எழிச்சிப் பேரணி மகிந்தவின் சர்வதேச அரசியல் குத்து வெட்டுக்களாலும் சீனாவோடு சேர்ந்து இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராகக் குழிபறிப்பதாலும் பெரும்பாலான சர்வதேச நாடுகள் மகிந்த அரசிற் கெதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார்கள்.மகிந்தவைத் தண்டிக்க அவர்கள் எடுத்துள்ள ஆயுதம் மகிந்த தமிழருக் கெதிராகச் செய்த போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளும் தான். தமிழர் வரலாற்றில் முன்னெப்பொழுதுமே இல்லாதவாறு ஈழத் தமிழரின் பிரச்சனை ஐக்கிய நாடுகளுக்குச் செல்கிறது. எதிர்ப்பதற்கு யாரும் உண்டா என்று முடிசூடா மன்னனாகவே இறுமாந்திருந்த மகிந்தவிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. மகிந்தவின் சர்வாதிகாரக் குடும்ப ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களும் தேவையற்ற பாதுகாப்புச் செலவுகளாலும் ஊழல் மலிந்த ஆட்சியாலும் திடீர் எரிபொருள் விலை ஏற்றத்தாலும் ஏற்பட்டுள்ள படுமோசமான பொருளாதார வீழ்ச்சி,விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து மகிந்தாவிற்கெதிராகப் போராடத் துணிந்து விட்டார்கள். மக்களைத் திசைதிருப்ப ஜெனீவா மகாநாட்டைச் சாட்டி தேசீய அபாயம் வந்து விட்டதாகக் கூறி சிங்கள மக்களை அரசிற்கு ஆதரவாக அணிதிரளுமாறு மகிந்த அறைகூவல் விடுத்துள்ளார். அதை விட ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழரை அடக்கிவிடும் சூழ்ச்சிகளால் த தே கூ தமது ஜெனீவாப் பயணத்தைக்கூட நிறுத்த நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. ஜெனீவாவில் மகிந்த அரசிற்கெதிரான பிரேரணை நிட்சயம் என்ற நிலை இருப்பதால் 54பேருக்கு மேல் கொண்ட மந்திரி பிரதானிகள் படையொன்றை மகிந்தா ஜெனீவாவில் இறக்கி விட்டுள்ளார். மகிந்தா திணறுவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழ் மக்களுக்குச் சார்பாக இவ்வளவு விரைவில் காலம் கனிந்து வந்தது எப்படி?. எமது விடுதலைப் போராளிகளின் ஒப்பற்ற ஈகை வீண்போக முடியாதென்றே எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் எம்மிடம் விட்டுள்ள சிறு பங்கையாவது நாம் சரிவரச் செய்து வெற்றிக் கனியைப் பறிக்கவேண்டும். ஜெனீவா மகா நாட்டிற்கு வலுச் சேர்ப்போம். ஜெனீவாவில் முன்னெடுக்கப்படும் அரசியல் ராஜதந்திரச் செயற் பாடுகளுக்கு மக்கள் எழிச்சி தான் அத்திவாரம்.கடமையை உணர்வோம்.3 மணி நேரத்தை யாவது எம் உறவுகளின் விடிவுக்காய்க் கொடுப்போம்.சோர்வடைய வேண்டாம். நம்பிக்கை பிறந்துள்ளது.நேரத்தை ஒதுக்குங்கள். அணியணியாய் புறப்படுவோம். அலை அலையாய் ஒன்றிணைவோம்.வெற்றி அடைவோம். 360 யூனிவேசிட்டி அவென்யு அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்பாக பெப்ருவரி 27 ம் திகதி திங்கட் கிழமை 3 மணியில் இருந்து 6 மணி வரை மாபெரும் எழிச்சிப் பேரணி. இணைந்து கொள்ளுங்கள்.


நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் அனுசரணையில் அனைத்து அமைப்புகளின் ஆதரவோடு கனடாத் தமிழர் இணையம் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள்  எழிச்சிப் பேரணி

மகிந்தவின் சர்வதேச அரசியல் குத்து வெட்டுக்களாலும்  சீனாவோடு சேர்ந்து இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராகக் குழிபறிப்பதாலும் பெரும்பாலான சர்வதேச நாடுகள்  மகிந்த  அரசிற் கெதிராகப் போர்க்கொடி ூக்கி உள்ளார்கள்.மகிந்தவைத் தண்டிக்க அவர்கள் எடுத்துள்ள  ஆயுதம் மகிந்த தமிழருக் கெதிராகச்   செய்த போர்க் குற்றங்களும்   மனித  உரிமை  மீறல் செயற்பாடுகளும் தான். தமிழர் வரலாற்றில் முன்னெப்பொழுதுமே  இல்லாதவாறு ஈழத் தமிழரின் பிரச்சனை ஐக்கிய நாடுகளுக்குச் செல்கிறது. 


எதிர்ப்பதற்கு  யாரும் உண்டா  ன்று முடிசூடா மன்னனாகவே இறுமாந்திருந்த மகிந்தவிற்கு  எதிராக மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. மகிந்தவின் சர்வாதிகாரக் குடும்ப ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களும் தேவையற்ற பாதுகாப்புச் செலவுகளாலும் ஊழல் மலிந்த ஆட்சியாலும் திடீர் எரிபொருள் விலை ஏற்றத்தாலும் ஏற்பட்டுள்ள படுமோசமான பொருளாதார வீழ்ச்சி,விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து   மகிந்தாவிற்கெதிராகப்  போராடத் துணிந்து விட்டார்கள்.

மக்களைத் திசைதிருப்ப ஜெனீவா  மகாநாட்டைச் சாட்டி தேசீய அபாயம் வந்து விட்டதாகக் கூறி சிங்கள மக்களை அரசிற்கு ஆதரவாக அணிதிரளுமாறு மகிந்த அறைகூவல் விடுத்துள்ளார். அதை விட ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழரை அடக்கிவிடும் சூழ்ச்சிகளால் த தே கூ தமது ஜெனீவாப் பயணத்தைக்கூட  நிறுத்த நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.  ஜெனீவாவில் மகிந்த அரசிற்கெதிரான பிரேரணை நிட்சயம் என்ற நிலை இருப்பதால் 54பேருக்கு  மேல் கொண்ட மந்திரி பிரதானிகள் படையொன்றை மகிந்தா  ஜெனீவாவில்  இறக்கி விட்டுள்ளார். மகிந்தா திணறுவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.

தமிழ் மக்களுக்குச் சார்பாக  இவ்வளவு விரைவில் காலம் கனிந்து  வந்தது  எப்படி?. எமது  விடுதலைப் போராளிகளின் ஒப்பற்ற ஈகை வீண்போக முடியாதென்றே எண்ணத் தோன்றுகிறது. அவர்கள்  எம்மிடம்  விட்டுள்ள  சிறு  பங்கையாவது  நாம்  சரிவரச் செய்து வெற்றிக் கனியைப்  பறிக்கவேண்டும். ஜெனீவா மகா நாட்டிற்கு  வலுச் சேர்ப்போம். ஜெனீவாவில் முன்னெடுக்கப்படும் அரசியல் ராஜதந்திரச் செயற்
பாடுகளுக்கு   மக்கள் எழிச்சி ான் அத்திவாரம்.கடமையை உணர்வோம்.மணி நேரத்தை யாவது எம் உறவுகளின்  விடிவுக்காய்க் கொடுப்போம்.சோர்வடைய வேண்டாம். நம்பிக்கை  பிறந்துள்ளது.நேரத்தை ஒதுக்குங்கள். அணியணியாய் புறப்படுவோம். அலை அலையாய் ஒன்றிணைவோம்.வெற்றி அடைவோம்.

360 யூனிவேசிட்டி அவென்யு அமெரிக்கத்  துணைத் தூதரகத்தின்  முன்பாக  பெப்ருவரி 27 ம் திகதி  திங்கட் கிழமை 3மணியில்  இருந்து 6 மணி வரை மாபெரும்  எழிச்சிப்  பேரணி.  இணைந்து கொள்ளுங்கள்.  

No comments:

Post a Comment